.

( காரைதீவு சகா)


 கல்முனையில் இருந்து கதிர்காமத்திற்கு தினமும் பஸ் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியசகர் பி.ஜௌபர் தெரிவித்தார்.

 ஒரு வழி பாதை பயணத்திற்கான கட்டணம் 1550 ரூபாய். முற்பதிவுக்கு முப்பது ரூபாய்.
 காலையிலே ஆறு மணி ஏழு மணிக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகின்றன.

 அதேபோன்று கருகாமத்தில் இருந்து காலை 8 மணிக்கு ஒரு பஸ் புறப்படுகின்றது.

இதேவேளை உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கான பஸ் சேவை தினமும் நடைபெற்று வருகின்றது அதற்கான பஸ் கட்டணம் 1025 ரூபாய் .

40 பேர் சேர்ந்து தனியாக ஒரு பஸ் பெற்று கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

கதிர்காமத்தில் போக்குவரத்து சபைக்கான முன்பதிவு காரியாலயம் நேற்று முன்தினம் இருந்து இயங்க தொடங்கி இருக்கின்றது.
 அங்கிருந்து கல்முனை பஸ் சாலை அத்தியட்சகர் பி. ஜாஃபர் எமக்கு இந்த கருத்துக்களை தெரிவித்தார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours