எருவில் கண்ணகி விளையாட்டுக் கழகம் நடாத்திய 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு சம்பியன் கிண்ணத்தையும் 15,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது. இக் கழகம் இவ்வருடம் பெற்றுக் கொண்ட 12 சம்பியன் கிண்ணம் இதுவாகும்.
முதலில் துடுப்பாடிய ரொபின் விளையாட்டுக் கழகம் 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 7.3 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
இக்கழகம் முதலாவது போட்டியில் திருவள்ளுவர் விளையாட்டு கழகத்தை 7 விக்கட்டுக்களினாலும் , இரண்டாவது போட்டியில் உதயா விளையாட்டு கழகத்தை 8 விக்கட்டுக்களினாலும் , காலிறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகத்தை 9 விக்கட்டுக்களினாலும் , அரையிறுதி போட்டியில் காமெலியன் விளையாட்டு கழகத்தை 5விக்கட்டுக்களினாலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும

Post A Comment:
0 comments so far,add yours