(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக  அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது. 

இதனால் மாவட்டத்தில்
பிரதான  வீதியால் செல்லும் வாகன சாரதிகள், பொதுமக்கள், போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த பனி மூட்டம் அதிகாலையில் இருந்து சுமார் 7 தொடக்கம் 8 மணி வரை நீடிக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு ,
நிந்தவூர்,ஒலுவில், பாலமுனை,  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில்  போன்ற பல  பிரதேசங்களிலும் அதிகமாக காணப்படுகிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours