( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எம்.ஜெயந்த ரத்னாயக்க அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கு விஜயம் செய்தார்.
அந்த வகையில் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு அவர் நேற்று முன்தினம் (5) விஜயம் செய்தார்.
அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
அவரை காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் வரவேற்று, அணிவகுப்பு மரியாதையை நடாத்தினார்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜகத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ,அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டார்.
மேலும், பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் ,பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.
இவ் விஜயம் தொடர்பாக நிலைய பொறுப்பதிகாரி ஜகத் ,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி எம் ஜயந்த ரத்னாயக்க விற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.





Post A Comment:
0 comments so far,add yours