( வி.ரி. சகாதேவராஜா)

 கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 வது தலைவராக றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்   பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

 புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினது பதவியேற்பு வைபவம் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில்நேற்று  (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநர் றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் புவுது டி சொய்சா மற்றும் கௌரவ அதிதியாக காரைதீவுப்பிரதேச செயலாளர்  சிவ.ஜெகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

முன்னாள் தலைவர் றோட்டரியன் ஸ்ரிபன் புஸ்பராஜா சம்பிரதாய பூர்வமாக டொங்கோ, தலைவரணியும் றோட்டரி பதக்கமாலை  மற்றும் ஆவணங்களையும் புதிய தலைவர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தனிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது இவ்  வருடம் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட  காரைதீவு மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

புதிய தலைவராக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன், புதிய செயலாளராக றோட்டரியன் கே.குகதாஸன்,  புதிய செயலாளராக றோட்டரியன் எம்.சிவபாத சுந்தரம் மற்றும் புதிய பணிப்பாளர் சபையினர் சம்பிரதாய பூர்வமாக பதவியேற்றார்கள்.
நிகழ்வை ஓய்வு நிலை அதிபர் க.புண்ணியநேசன் ஆங்கிலத்தில் அழகாக தொகுத்தளித்தார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours