(சுமன்)



மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மயிலம்பாவெளி விபுலாந்தா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் பாடசாலையின் அதிபர் எஸ்.வை.சந்திரகுமார் தலைமையிலும், பிரதி அதிபர் செ.பத்மநாதன் வழிப்படுத்தலிலும் சகல ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்கள் மத்தியில் கல்வி அறிவோடு சேர்த்து சமூக விடயதானங்களும் மிளர வேண்டும், மாணவர்களுக்கு தேர்தல் தொடர்பான அனுபவமுறைமை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கங்களோடு பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற முறைமை உருவாக்கப்பட்டு அதற்கான தேர்தலொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் மாணவர்கள் மத்தியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான விருப்பிலக்கங்கள் வழங்கப்;பட்டு மாணவர்களுடைய வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours