எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் சாதனைபடைத்த மாணவர்களையும் பாடசாலையில் கற்பித்து இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை அதிபர் என்.பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீன், விசேட அதிதிகளாக இலங்கை வங்கி முகாமையாளர் கு.சசிகரன், ஆசிரிய ஆலோசகர் இ.குணசீலன் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் கு.மதிவண்ணன் பாடசாலையின் பிரதி அதிபர் எம் .தர்மலிங்கம் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வின்போது வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற அதிபர் க.பேரானந்தம் சம்மாந்துறை வலயத்தின் ஆங்கிலப்பாட வளவாளர் பி.வி.குணரெட்ண, ஆசிரியர்களான திருமதி எம்.ஆர் குமாரராஜா, தே.ருக்மாங்கரன்,மா.பேரின்பராசா,திருமதி எஸ்.ராஜன் ஆகியோருடன் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற சி.தர்சிக்கா 2020 ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற தி.சஜந் ஆகியோரும் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டதுடன் வலயக்கல்விப்பணிப்பாளரின் சேவையினைப் பாராட்டி அப்பிரதேச பெற்றோர்களால் பொன்னாடை போர்த்தி கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது









.jpeg)




.jpeg)





Post A Comment:
0 comments so far,add yours