க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பன பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜயந்த தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கு இணங்க பரீட்சை திகதியை நிர்ணயித்ததாக குறிப்பிட்டார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours