ஈச்சிலம்பற்று பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் தனது மோட்;டார் சைக்கிக்கிளை செலுத்தி சென்ற போது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் குடும்பஸ்தர் பலியான சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத்துறை ஈச்சிலம்பற்று பிரதேசத்தைச்சேர்ந்த மூன்று பிள்;ளைகளின் தந்தையான (40) வடிவேல் மாணிக்கராசா என்பவரே இவ்விபத்தில் பலியானவாராவர்
வழமை போன்று கடந்த (29) தினத்தன்று கடந்தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய பின்னர் தனது வேலையின் நிமிர்த்தம் மோட்டார் சைக்கிளை வீதியூடாக செலுத்திக் கொண்டுடிருக்கும்; போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்த நிலையில் குறித்த நபரும் எரிகாயங்களுக்கு உள்ளாகி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்;சை பலனின்றி (14) உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்;டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours