(சுமன்)


எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை கண்டலடி துயிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் போராளிகள், நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours