Future mind குழுமத்தின் மட்டக்களப்பு மாவட்ட சமூக நலன்விரும்பிகளின் ஒன்றுகூடலும் சமூகசேவையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் சின்ன உப்போடை மட்டக்களப்பில் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குரவரசந அiனெ குழுமத்தின் ஸ்தாபகத்தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ் .கோகுல் தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஒன்று கூடல் நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவருடகலமாக கல்வி சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவருகின்ற எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் அ.வசீகரன் அவர்களது சேவையினைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வின்போது; விமோச்சனா இல்லத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவராஜன் அவர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்தார் .
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களது கல்விமுன்னேற்றம் மற்றும் வாழ்வாதரத்திற்காக பல்வேறு உதவிகளைச் செய்துவரும் நிலையில் இப்பாராட்டு கிடைத்திருப்பது மேலும் அவரது சேவைக்கான அங்கிகாரமாக அமைந்திருப்பதாக பல பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றனஇந்நிகழ்வில் சட்டத்தரணி துசாந்தன் உட்பட பல துறைகளைச் சார்ந்த புத்திஜீவீகள் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின் போது பல்வேறு துறைகள் சார்ந்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இடர் படாத வகையில் துரிதமாக மக்களுக்கு தீர்வினைக் கொடுக்கின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் தீர்வுகளை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இந்நிகழ்வில் கல்வித்துறையில் ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கான ஊக்கிவிப்பாக பரிசில்கள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்







Post A Comment:
0 comments so far,add yours