( காரைதீவு சகா)
சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா மகராஜின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று(29) செவ்வாய்க்கிழமை அவர் பிறந்த காரைதீவு மண்ணில் நடைபெற்றது .
காரை இந்து சமய விருத்தி சங்க தலைவர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக காரைதீவுப்பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து கொண்டார் .
சுவாமி நடராஜானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட ஆன்மீக பிரமுகர்கள் அதிபர்கள் சுவாமியின் உறவினர்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக சுவாமியின் உறவினரான ஓய்வு நிலை ஆசிரியர் த. அருணாசலம் நந்திக் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours