( வி.ரி.சகாதேவராஜா)


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடத்தப்படும் மஹா யாகம்  நிகழ்வானது இன்று புதன்கிழமை அதிகாலை  5 .00மணி முதல் காலை 7 மணி வரை
பெரிய நீலாவணை  ஸ்ரீ மஹா விஷ்ணு வேதஸ்தானத்தில் இடம் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இந்நிகழ்வானது  ஆலயதரிசனம் என்னும் நிகழ்வினுடாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்  தமிழ் சேவை தென்றல் அலைவரிசையில் நேரடியாக 6.30 மணிக்கு  ஒலிபரப்பு செய்யப்படும்.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திரு வே ஜெகதிஸன்  கலந்து கொள்வதுடன் கெளரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்  திரு ரி.ஜெ. அதிசயராஜ் ,மற்று இந்து குருமார்கள்,ஆலயதர்மகர்த்தாக்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்பாடுகளை மாவட்ட  இந்து சமய கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி  மேற்கொண்டுள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours