( வி.ரி.சகாதேவராஜா)
அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம்(IMHO- USA) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 500 கண்வில்லைகளை(lenses) வழங்கி வைத்தது.
கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிலையம் நேற்று இந்த 500 கண் வில்லைகளை வழங்கி வைத்தது .
சர்வதேச சுகாதார வைத்திய நிறுவனத்தின் பொருளாளர் முரளி ராமலிங்கம்( கணக்காளர்) நேற்று நேரடியாகவே வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இந்த கண்வில்லைகளை வழங்கினார்.
அவர்கள் ஏலவே இந்த வைத்தியசாலையில் நிர்மாணித்த சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் சிறுபிள்ளை வைத்திய விடுதி போன்ற இடங்களையும் பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours