( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை ஆதாரவைத்திய சாலையில் சேவையாற்றும் ஊழியர்களது சாதனை படைத்த 74 பிள்ளைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

தரம் 5 கபொத. சாதாரண தரம் மற்றும் கபொத உயர் தரம் ஆகிய
 பொதுப் பரீட்சைகளில் காட்டிய சாதனைகளைக் கௌரவிக்குமுகமாக இப் பாராட்டு விழா நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலை  ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் சிறப்பு சாதனை படைத்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 இந்த நிகழ்வானது கல்முனை ஆதாரவைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பிரதி வைத்திய அத்தியட்சகர்களான டாக்டர்  சா. இராஜேந்திரன், டாக்டர்.ஜே. மதன்  வைத்தியசாலையின் கணக்காளர் எம்.கேந்திர மூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வின் போது 74 புலமையாளர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இடையிடையே கண்கவர் நடனநிகழ்ச்சிகள் அரங்கேறின.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours