(சுமன்)



சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடா வருடம் புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அஞ்சலி நிகழ்வு இன்றைய தினமும் உணர்வுபூர்மாக அனுஸ்டிக்கப்பட்டது.

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் உபதலைவர் பி.பிரவீன் அவர்களின் வழிப்படுத்தலில் கழகத்தின் செயலாளர் செல்வி பி.பவணிஜா அவர்களின் தலைமையில் மேற்படி அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கழகத்தின் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours