(மண்டூர்  நிருபர்)

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் கடந்த (25)ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

நாவலர் வீதி பெரியகல்லாற்ரைச் சேர்ந்த ஜெகஜோதி டானியல் டனிஷ்டன் வயது (22) என்பவரே இவ்விபத்தின் போது பலியானவராவார்.

சம்பவ தினத்தன்று நத்தார் தினமானதால் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்கள் வீட்டுக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு சென்றவர் கல்முனை மட்;டக்களப்பு பிரதான வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டு சுற்று மதிளில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்கு வரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours