(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு



தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வானது இன்று (15) திகதி அலரி மாளிகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர்  தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் பெற்றுக்கொண்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற குறைந்தளவு பௌதீக மற்றும் மனித வளங்களை கொண்டு வினைத்திறனான  வகையில் சேவையாற்றியமைக்காகவே  இவ் விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours