(வி.ரி.சகாதேவராஜா)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற ஓவியர் .மு.பத்மவாசன்
நேற்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார்.
அவர் நேற்று(20). கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக கட்புலகற்கைகள், தொழில்நுட்பத்துறை 1ஆம் வருட மாணவர்களுக்கு ஓவியங்கள் தொடர்பான அறிமுகம் என்னும் தலைப்பில் கலந்துரையாடலுடனான பயிற்சி வகுப்பு நடத்தினார்.
இந்நிகழ்வில் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி, கட்புலகற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சீவரெத்தினம்,மற்றும் விரிவுரையாளர்கள், அம்பாரை மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ, கிழக்கு மாகாணபிராந்திய அலுவலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டர்.




Post A Comment:
0 comments so far,add yours