இ.சுதாகரன்


பட்டிருப்பு கல்வி வலயத்தில் பல வருட  காலமாக கல்வி மேம்பாட்டிற்கு காத்திரமான முறையில் சேவையாற்றி ஓய்வு பெறுகின்ற சேவைத் திலகங்களான கல்விப் பெருந்தகைகளை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் களுதாவளை மகாவித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் பட்டிருப்பு கல்வி வலய சித்திரப்பாட சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் பி.சிறிகாந் தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓய்வு பெறவுள்ள பட்டிருப்பு கல்வி வலய சித்திரப்பாடத்துக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் மற்றும் சித்திரப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எ.ஜெயவரதராஜன் மற்றும் சித்திரப்பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பணியும் அனுபவப் பகிர்வினை களுதாவளை மகாவித்தியாலயத்தின் அதிபர் கே.சத்தியமோகன் மற்றும் பி.புஸ்பநாதன் ஆசிரியர் (கமு/கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை)ஆகியோர் நிகழ்த்தினர்.

இதன் போது விழாவின் கதா நாயகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் இ.இரத்தினசபா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.நிகழ்ச்சித் தொகுப்பினை கலைஞரும் ஆசிரியருமாகிய எ.அனல் அவர்கள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours