(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு



நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரங்கள் இன்றியும் வீண் செலவினங்களை குறைத்து அதனை வறிய மக்களுக்கான உதவியாக வழங்குமாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா  ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆடம்பரங்கள், வான வேடிக்கைகள் போன்றவற்றிற்காக செலவிடும் பணத்தினை ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலமே கிறிஸ்து எம்மிடம் எதிர்பார்க்கும் பகிர்தலை அடையமுடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours