(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

கல்விதான் ஒரு சமூக மேம்பாட்டிற்கு அடிப்படையென கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
நேற்றைய  தினம் மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அபிவிருத்திச் சங்கத்தின்
தலைவர் ஜோதிராஜா தலைமையில்  இடம்பெற்ற நிகழ்விற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன், சிரேஷ்ட சமூக சேவகர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், துறைசார் அதிகாரிகள், சாதனையாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours