அஸ்ஹர் இப்றாஹிம்

நண்பர்கள் வட்டத்தினால்  நீலையூர் சுதாவின்  "கிடுகுவீடு" நூல்  அறிமுகவிழா  கடந்த  சனிக்கிழமை   கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்  வ.கனகசிங்கம் தலைமையில்  மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு இராமகிருஷ்ன உதவி முகாமையாளர் சுவாமி சுராச்சிதானந்தர் அவர்களின்  ஆசீர் வாதத்துடன் ஆராம்பித்து வைக்கப்பட்டது              

இந்நிகழ்வில் கிராமிய வீதி   அபிவிருத்தி   இராஜாங்க அமைச்சர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன்,    மட்டக்களப்பு  மாவட்ட  பாராளுமன்ற உறிப்பினர்  கோவிந்தன் கருணாகரன் ,   மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க  அதிபர்  க.கருணாகரன்   மற்றும்  முன்னாள்  பாராளுமன்ற உறிப்பினர்களான  சீ.யோகேஷ்வன், கி.துரைராசசிங்கம்  ,  அலிசாகிர் மௌலானா  ,  முன்னாள்   மாகாணசபை உறிப்பினர்களான   இரா துரைரெத்தினம் , பிரசன்னா ,பிரசாந்தன் ஆகியோர்  கலந்து  நிகழ்வைச் சிறப்பித்தனர் 

 கி.கிருபைராசா அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதைதொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரால் தலைமையுரை ஆற்றப்பட்டது  மேலும் தென்கிழக்கு  பல்கலைக்கழக சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி கா,கோமதிராஜ் நூலாசிரியர் பற்றிய உரையையும் மட்டக்களப்பு கல்லடி சிவாநந்த வித்தியாலய ஆசிரியர்  .கி குமாரசிங்கம் நூல் அறிமுக உரையையும் ஓய்வு நிலை அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம் நூல் நயவுரையையும் ஆற்றினார்கள் 
அத்துடன் மட்டக்களப்பு மகஜனகல்லூரி மாணவர்களது நடனநிகழ்வும் அதிதிகள் உரையும் இடம்பெற்று இறுதியில் நூல் அறிமுகவிழா நடைபெற்றது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours