சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பு 


சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 7ம் கிராமம் கணேஷா வித்தியாலயத்தில் அதிபர் கே. பேரானந்தம் அவர்களின் ஒழுங்கமைப்பில்  இந்நிகழ்வு இடம்பெற்றது அன்பே சிவம் அமைப்பின் தொண்டர்களான ஆசிரியர் விக்னேஸ்வரன் ரவிந்திரராஜ், ஆசிரியர் கணேஷ் லவன் மற்றும் சோமசுந்தரம் வினோஜ்குமார் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதில் பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, பாடசாலையைச் சுற்றி மரங்களும் நடுகைசெய்யப்பட்டது. இதில் பாடசாலையில் அதிபர் கந்தையா பேரானந்தம் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அனர்த்தங்களினால் அழிந்து வரும் மரங்களை உருவாக்கும் நோக்கில் அன்பே சிவம் அமைப்பினால் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வரம்புயர மரநடுகை திட்டத்தின் மூலம் இதுவரை வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் 32000 க்கு மேற்பட்ட மரங்களை நடுகை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours