( வி.ரி.சகாதேவராஜா)
இந்துக்களின் கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த விபுலபுரியில் தீபத் திருவிழா நிகழ்வு நேற்று(7) இரவு சிறப்பாக நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் இணைந்து பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
தீபத்திருநாள் தினத்தினை முன்னிட்டு கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு சுவாமி விபுலாநந்தர் அவதரித்த இல்லத்தில் இடம்பெற்றது.சுவாமியின் இல்லத்தில் விசேட பூஜூயும் இடம் பெற்றது.
மேலும் இந்நிகழ்வில்
இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம்
சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலைய ,பரதநாட்டிய மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை அளித்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours