நூருல் ஹுதா உமர்
YMMA கல்முனை கிளை தலைவர் ஹாரூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்ற என்.எம்.நப்றத், 7ஏ,2பீ சித்திகளைப் பெற்ற பாத்திமா ஹீரா மற்றும் சித்தி பெற்ற ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும், பரிசுப் பொதிகளும் வழங்கி வைத்ததுடன் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களும் அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
இந்நிகழ்விற்கு YMMA அமைப்பின் தேசிய உப தலைவர் எஸ். தஸ்தகீர், இவ்வமைப்பின் தேசிய செயற்பாட்டுப் பணிப்பாளர் கே.எல். சுபைர், அமைப்பின் ஆலோசகர் பொறியலாளர் ஏ.எம். அஜ்மீர், மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.றியாஸ், அமைப்பின் செயலாளர் வை.எம். ஜெஸ்மிர் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும், அல்ஹாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி தஸ்திக் மதனி, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours