( வி.ரி. சகாதேவராஜா)


 இலங்கையில் உள்ள சகல அரச பாடசாலைகளிலும் புது வருடத்தில் இருந்து பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது .

இது தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு சகல மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

முதல் 12 புதன்கிழமைகளில்  காலை 7.30 மணிமுதல் 7.40 மணி வரை இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி புதன்கிழமை முதலாவது நாள் திட்டம் அறிமுகமாகவுள்ளது.

 நாளை  இரண்டாம் தேதி திங்கட்கிழமை பாடசாலை மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகின்றது என்பது தெரிந்ததே.

ஆக பத்து நிமிடங்களைக் கொண்டதாக "நிலையான தன்மையில் அமர்த்தல்" என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் 12 புதன்கிழமைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 மாணவர்களின் விழுமியங்கள் மற்றும் பண்புசார் விருத்தி தொடர்பாக இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கின்றது .

நிலையான தன்மையில் அமரச் செய்தல் என்ற இந் நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதனை சர்வ மத குழுக்கள் கண்காணிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours