( வி.ரி.சகாதேவராஜா)


 அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு பத்திரம் தாக்கல்  18ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும்
என் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அறிவித்துள்ளார்.

குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 20 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 225 வட்டாரங்கள் ஊடாக 231 உறுப்பினர்கள் வட்டாரங்களூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.  அதற்காக  குறைந்தது 438  வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

தற்போது அமுலில் இருக்கும் பழைய முறைப்படி தற்போது நியமனப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள இருபது உள்ளூராட்சி சபைகளுக்கான பூரண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சபையின் வட்டாரங்களின் எண்ணிக்கை, தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பாளர்களின் எண்ணிக்கை ,அதில் ஆண் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை, செலுத்த வேண்டிய கட்டுப்பணம் போன்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவர் 1500 ரூபாவையும்,  சுயேட்சை அணியின் வேட்பாளர் ஒருவர் 5000 ரூபாவை யும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் அதிகூடிய வட்டாரங்களும் அதிகூடிய உறுப்பினர்களுமுள்ள உள்ளூராட்சி சபையாக கல்முனை மாநகர சபை திகழ்கிறது. அங்கு 23 வட்டாரங்கள் 24 உறுப்பினர்கள்.

மாவட்டத்தில் அதி குறைந்த வட்டாரங்களும் குறைந்த உறுப்பினர்களுமுள்ள உள்ளூராட்சி சபையாக அக்கரைப்பற்று பிரதேச சபை திகழ்கிறது. அங்கு 5வட்டாரங்கள் 5 உறுப்பினர்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours