( வி.ரி.சகாதேவராஜா)
சமகால பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு போசாக்கு குன்றிய குழந்தைகளுக்கு மட்டக்களப்பு றோட்டரிக்கழகம் 250 சத்து மாப்பொதிகளை நேற்று முன்தினம் வழங்கி வைத்தது.

 மட்டக்களப்பு றோட்டரி கழகம், செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் திணைக்களத்தோடு இணைந்து அப்பிரதேசத்திலுள்ள போசாக்கு குன்றிய குழந்தைகளுக்கான 250 சத்து மா பொதிகளை வழங்கி வைத்தது .

இந் நிகழ்வானது மட்டக்களப்பு றோட்டரி கழக தலைவர் றோட்டரியன் புஞ்சியப்பு ரமணதாச தலைமையில் நடைபெற்றது.
 அப்பிரதேசத்திற்கு பொறுப்பான மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பாத்திமா பஸ்நத்தின் பங்குபற்றலுடன் செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours