சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று  அனுப்பி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ்,  கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி, கே.குலமணி, ஆர்.வளர்மதி ஆகியோர்கள் தங்களின் இராஜினாமா கடிதத்தை சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் இன்று கையளித்தனர்.

இராஜினாமா கடிதங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருகின்ற 20 திகதிற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்படுவதற்கான  சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றது அவ்வாறு கலைக்கப்படாவிட்டாலும் கூட எதிர்வரும் மார்ச் 19ம் திகதி உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வரும்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours