(எஸ்.அஷ்ரப்கான்)


இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனைக்குடி - 01 பிரதேசத்தில் உள்ள  சமூர்த்தி உதவி பெறும் பயனாளிகள், பொதுமக்கள் இணைந்து இன்று (30) திங்கட்கிழமை கல்முனை கடற்கரைப் பற்றி வளாகத்தில் சிரமதானத்தை முன்னெடுத்தனர்.

கல்முனைக்குடி - 01 அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.றினோஸா, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ராசமலர், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.தெளபீக் ஆகியோரின் வழி நடாத்தலில் இச் சிரமதானம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இங்கு மிக ஆர்வத்துடன் மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்


.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours