தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்பது (09) பேர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்கின்றனர்.
இவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு (30) உபவேந்தர் அலுவலகத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் கணக்காளர் சி.எம். வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு உரையாற்றிய உபவேந்தர்;பல்கலைக் கழகத்துக்கு ஆற்றிய பணிகள் மற்றும் காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்தும், அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மகிழ்ச்சியான ஓய்வுகால வாழ்க்கை என்பவற்றுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours