( காரைதீவு  சகா)

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று முன்தினம் அல்அர்ஸத் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி சார் ,கல்வி சாரா உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் பிரதி கல்வி பணிப்பாளர் அப்துல் மஜீத் தலைமையில்  நடைபெற்றது .

பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம் .அமீர் கலந்து சிறப்பித்தார்.

 பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹைதர் அலி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். உத்தியோகத்தர்களின் பாடல்கள் கவிதைகள் இடம்பெற்றன.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours