(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக கணபதிப்பிள்ளை மதிவண்ணன்  நேற்று (09)  கடமையை பொறுப்பேற்றார்.

1994 ஆண்டு  அரசபணியில் இணைந்த  இவர் கலைப் பட்டதாரியாவார்.

 கல்வி அமைச்சு, பட்டிப்பளை பிரதேச செயலகம் ஆகியவற்றில்  முகாமைத்துவ சேவை  அலுவலராகவும், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது முகாமைத்துவ சேவை அதிசிறப்பு (சுப்ரா) தர பரீட்சையில் சித்தியடைந்து நிருவாக  உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்டு, நொச்சிமுனை தொழில் நுட்ப கல்லுரியின்   பதிவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நிருவாக உத்தியோகத்தர்  மதிவண்ணன்  மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours