(காரைதீவு சகா)
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு வீடி கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 03 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும், ஆயிரத்தி 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இச் சம்பவம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா நேற்று வியாழக்கிழமை (12) இடம் பெற்றது.
குற்றச்சாட்டின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு நேற்று வியாழக்கிழமை (12) புகைத்தலுக்காக வீடி வழங்கிய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் ஆஜர் செய்த போது 03 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும், ஆயிரத்தி 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours