( வி.ரி.சகாதேவராஜா)

2000 ஆண்டுகளுக்கு முன்பு  "அகத்தியம்" என்ற முதல் தமிழ் இலக்கண நூலை  எழுதியவரும், சப்தரிசிகளில் ஒருவரும், சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக விளங்கிய அகத்திய மாமுனிவரின் குருபூஜை தினம் நேற்று (9) திங்கட்கிழமை அவர் வாழ்ந்ததாக கூறப்படும் திருகோணமலை கங்குவேலியில் வெகுசிறப்பாக இடம் பெற்றது.

குருபூஜை தினத்தை முன்னிட்டு கங்குவேலியில் உள்ள அகத்தியர் ஸ்தாபனத்தில்( ஆலயத்தில்) பெரும் யாகமும், அன்னதானமும், இலவச சித்த மருத்துவமுகாமும் இடம் பெற்றன.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் ஏற்பாட்டில் நேற்று (9)  திங்கட்கிழமை "அகத்தியர் பெருமானின் ஆயிலிய நட்சத்திர குருபூஜை ஜெயந்தி விழா" கோலாகலமாக நடைபெற்றது.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி , நமசிவாய சுவாமி சிவயோகி மகேஸ்வரன் , சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன்,வேதசகா, தியாகராஜா சுவாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் நேற்றைய பெரும் யாகத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழக  சித்தமருத்துவ பீட மாணவர்கள் யாகத்தில் ஈடுபட்டனர். விரிவுரையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் , பிரபல தவில் சக்கரவர்த்தி செந்தில் பங்கு பற்றலில் நடைபெற்ற இசைக் கச்சேரி அப்பிரதேசத்தையே அதிரவைத்தது.

அகஸ்தியர் பிறந்த மார்கழி மாத ஆயிலிய நட்சத்திரம் வருகின்ற நேற்று(9) திங்கட்கிழமை  ஆறாவது உலக சித்தர் தினமும் அனுஷ்ட்டிக்கப்பட்டது

அவர் சித்த மருத்துவத்தின் தந்தையாகவும் தமிழுக்கும் மருத்துவத்திற்கும் பாரிய பல நூல்களை எழுதி இருக்கிறார். அவர் செய்த அந்த மகத்தான பணியை உலகளாவிய மக்கள் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நேற்று அகத்தியர் ஆலயத்தில் இலவசமாக சித்த மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டதும் சிறப்பம்சமாகும்.

பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் அன்னதானமும் இடம் பெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours