உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பு!!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  இன்று(18) திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைவாக நாளை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும்
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள்  ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை முன்னாயத்த ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours