( வேதசகா)

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை)பழைய மாணவர் மன்றம் நான்கு வருட காலத்திற்கு பிறகு மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

அதற்கான பொதுக்கூட்டம்  பாடசாலை அதிபர் ம.சுந்தராஜன் தலமையில் நேற்று முன்தினம்(07) சனிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.


கூட்டத்தில் பாடசாலையின் கல்வி மற்றும் பௌதிக வள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடப்பட்டதுடன் கல்லூரியின் பவளவிழா  நிகழ்வுகள் தொடர்பாவும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம்.
ஆலோசகர்-வி.ரி.சகாதேவராஜா
தலைவர்-.எம்.சுந்தராஐன்
செயலாளர்-எல்.சுலெக்‌ஷன்
பொருளாளர்-Dr.கே.ஹரிசாந்
கணக்காய்வாளர்-.சி.நந்தகுமார்
உபதலைவர்-வி.விஜயசாந்தன்
உபசெயலாளர்-.எஸ்.பவித்திரன்
உபபொருளாளர்-.எம்.தசாந்

*நிர்வாக சபை உறுப்பினர்கள்*
ரி.புவனேந்திரராஜா, ஜெ.சோபிதாஸ், எஸ்.பாஸ்கரன், ரி.அருன்சாந், ரி.சுசிந்தகோசலன், வி.கபிலன், ஜி.விதுர்சன், கே.குகதீபன், கே.சதுசன் ஆகியோரும் தெரிவு செய்யப்ட்டனர்.

மேலும் பழையமாணவர்களை தங்கள் உயர்தர ஒன்றியங்கள் மூலமாக அங்கத்துவமாக இணைத்துகொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டதுடன், புதிய செயலாளர் சுலேக்ஷனின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours