( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலக பொங்கல் விழா நேற்று (13) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது .
இத் தைப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு நாளைய தைப்பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் முகமாக பொங்கல் பொதிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது .50 பொங்கல் பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இப்பொங்கல் விழாவில் அக்கரைப்பற்று நர்த்தனா கலை கலா மன்றத்தினரின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் கணக்காளர் எம்.அரசரெத்தினம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்எம்.அனோஜா, நிருவாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா ஆகியோருடன் மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் இணைப்பாளர் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,தெரிவுசெய்யப் பட்ட பயனாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






Post A Comment:
0 comments so far,add yours