எருவில் கண்ணகி விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைப்பு . எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் சமூகசேவகர் அ .வசீகரன் அவர்களின் அனுசரணையில் எருவில் கண்ணகி விளையாட்டு கழகத்தின் கோரிக்கைக்கு இணங்க சீருடைகள் மற்றும் பாதணிகள் ஒருஇலட்சத்து நாற்பதாயிரம் பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் Y.U.K கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
இதன் போது எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் எருவில் வட்டார கிளையின் பிரதித் தலைவருமான சமூகசேவகர் அ .வசீகரன்அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சமூக தொண்டுகளுக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours