நூருள் ஹுதா உமர்
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் இலங்கை பொறியியலாளர் சேவை வகுப்பு- I ( SLES - I ) ஐச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறையில் 25 வருடங்களுக்கு மேலான சேவை அனுபவத்தை பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார் . நீர்ப்பாசனப் பொறியியலாளராக , பிரதம நீர்ப்பாசன பொறியியலாளராக மற்றும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வரும் பொறியியலாளர் யூ.எல்.எ.நஸார் உலக வங்கியின் உதவியுடன் ( World Bank ) செயற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் சிரேஷ்ட பொறியியலாளராகவும் கடமையாற்றறியவர்.
இவர் பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களின் இயக்குதல், பராமரிப்பு, நீர்மாணம், புனரமைப்பு . வடிவமைப்பு மற்றும் செயற்படுத்துதல் போன்றவாறான விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்பதுடன் பாரிய நீர்ப்பாசனக் குளமான தீருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு நீர்ப்பாசனக் குளத்தின் நீர்க்கொள்ளளவினை அதிகரிக்கும் வடிவமைப்புக்குப் பொறுப்பாக இருந்து அதனைச் செவ்வனே செயற்படுத்தியவர் . நீர்க்கொள்ளளவு அதிகரிக்கப்பட்டமை காரணமாக பயிர் செய்யும் காணிகளின் அளவு அதிகரிக்கப்பட்டமை இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கது .
மேலும் பல பாரிய அணைக்கட்டு, வான், துருசு , Anicut பிரதான மற்றும் கிளை வாய்க்கால் நிர்மாணங்களுக்குத் தேவையான வடிவமைப்புக்களை ( designs ) செய்து வெளிநாட்டு மற்றும் இலங்கை அரசின் நிதியுதவிகளினால் செயற்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளராக கடமையாற்றியவர் . தற்போது உலக வங்கியின் உதவியுடன் பொத்துவில் மற்றும் லகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள சிறு குளங்கள் புனரமைக்கப்படுகின்றமைக்கும் பொறுப்பாக உள்ளவர் என்பதுடன் அக்குளங்களின் நீர்க்கொள்ளளவு அதிகரிப்படுவது காரணமாக அதிகரித்த பயிர்ச்செய்கை , அதிகரித்த உற்பத்தி என்பன தற்போதைய தேவையான உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றது .
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ( தேசிய பாடசாலை ) கல்விகற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானிப்பட்டத்தை சிவில் துறையில் பெற்றவர் என்பதுடன் நிர்மாண முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பினை மேற்கொண்டவராவார் . மேலும் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவரான இவர் பட்டயப் பொறியியலாளரும் ஆவார் . சீரமம் பாராத அயராத கடமையினால் விவசாயிகளின் அன்பினைப் பெற்ற பொறியியலாளர் யூ.எல்.எ.நஸார் அவர்களின் கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் நியமனம் விவசாயிகளின் அதிகரித்த விவசாய செய்கை , அதனோடான அதிகரித்த உற்பத்தி என்பவற்றுக்கு உறுதுணையாக அமையும் என்பது திண்ணம்
.
.


Post A Comment:
0 comments so far,add yours