மாளிகைக்காடு நிருபர்

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் சம்மாந்துறை கமு/சது/ அஸ்-ஸமா வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள்,  மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர்  வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின்  பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றிசாட் தலைமையிலான குழுவினர் சம்மாந்துறை கமு/சது/ அஸ்-ஸமா வித்தியாலய மாணவர்களுக்காக இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.

சம்மாந்துறை கமு/சது/ அஸ்-ஸமா வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ.எம்.எம். சஹீட் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்ட இந்த வேலைத்திட்ட கையளிப்பு நிகழ்வு பாடசாலையின் புதிய அதிபர் எஸ்.எம். சஹீட் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் பிரதம அதிதியாகவும், உதவி கல்வி பணிப்பாளர் ஏ. நஸீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஏ.எம். நளீம், இணைப்பாளர் எப். இமாமுதீன், எஸ்.எல்.டி.பி இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் வை.எல்.ஏ. ரஸூல், பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours