மாளிகைக்காடு நிருபர்


தேசிய இளைஞர் சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மாணவி சபிலுல் லமாஹ் 08 வயது பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சம்பியனானார்.

“இலங்கை செஸ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்” அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கான (ஆண், பெண்) செஸ் சம்பியன்ஷிப் போட்டியானது இம் மாதம் 28, 29 (சனி, ஞாயிறு) திகதிகளில் சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலையில் நடைபெற்றது. இதில் 08 வயது பிரிவின் கீழ் விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி சபிலுல் லமாஹ் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய ரீதியில் விளையாடக் கூடிய வாய்ப்பையும், சர்வதேசமட்டத்தில் விளையாடக் கூடிய வாய்ப்பையும்  பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours