(எஸ்.அஷ்ரப்கான்)


அக்கரைப்பற்று வலய ஒலுவில், அல் - ஹம்றா மகா வித்தியாலய, க.பொ.த.உயர்தர மாணவர்களின் விடுகை விழா பாடசாலையில் வலயத்தலைவர் ஏ.சி.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே. அப்துர் ரஹீம்,  கெளரவ அதிதிகளாக பிரதி அதிபர்களான எம்.ஏ.கமறுன்நிஸா, எம்.ரீ.எம்.சியாத்,  விசேட அதிதிகளாக உதவி அதிபர்களான  எம்.எச்.மஹ்மூத் நஸீம், ஏ.ஜே.எம்.றினீஸ் உட்பட ஆசிரியர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள்  எனப்பலரும் 
கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் ஞாபகார்த்த மலர் வெளியீட்டுடன்,  இறுதி பாடசாலை மட்ட பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours