(சுமன்)


எதிர்வரும் உள்ளூரட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) சார்பில் கோரளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையில் போட்டியிடும்  வேட்பாளர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் வாகரையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் செல்லத்துரை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், முறையான விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளல், தற்கால அரசியற் களச் சூழல் என்பன குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours