( வி.ரி. சகாதேவராஜா)

 இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் "தூய்மையான  நகரத்தினை உருவாக்குவோம்" எனும் செயல் திட்டத்தின் கீழ் 
திருக்கோவில் பிரதேசத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 "தூய்மையான  நகரத்தினை உருவாக்குவோம்" திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது .அவற்றில்  திருக்கோவில்  பிரதேச செயலகமும் ஒன்றாகும்.

இதனடிப்படைல்  திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா.கஜேந்திரன்  தலைமையில்  பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.பிரபாகரனின் ஒருங்கமைப்பில்  அரச  திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் இளைஞர் கழகங்கள் விளையாட்டு கழகங்கள் முப்படையினர் பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்கள்  ஆகியோரின் பங்களிப்புடன்  இச் சிரமதானம் இடம் பெற்றது.


 இத்திட்டமானது தொடர்ச்சியாக ஏழுநாட்கள் ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் திருக்கோவில்  பிரதேச செயலக பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்  உதவிச் செயலாளர் க.சதிசேகரன் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவை மண்றத்தின் உதவி பணிப்பாளர்  ஏ.கங்கா தமயந்தி சாகரிகா  மற்றும் மாவட்ட தேசிய இளைஞர் சேவை அதிகாரி எம்.மஜீத் மற்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மோகனகாந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மோகனராஜா, கிராம நிர்வாக உத்தியோகத்தர்  எஸ்..கந்தசாமி, மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும்  பிரதேச செயலக  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத்தினர் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours