கடல் இல்லாத ஆப்கானிஸ்தானில் நாட்டிற்கு கப்பல்துறை அமைச்சர் இருப்பது போல சுதந்திரம் இல்லாத இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாம். எனவே பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கறுப்பு சுதந்திர கண்டன பேரணிக்கு 5 கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவிப்பதுடன் இந்த கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கிளந்தொழவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் அழைப்புவிடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ளு நாடாளுமன்ற உறுப்பின் காரியாலயத்திவல் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்று ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 75 சுதந்திர தினம் 4ம் திகதி அரசாங்கத்தினால் கொண்டாடப்பட இருக்கின்றது வருடாவருடம் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு வருகின்றது ஆனால் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்றுவரை தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் இருந்தே தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவது மாத்திரம் அல்லாமல் தமிழர்கள் பிரதேசங்கள் கூட ஒடுக்கப்பட்டுவருகின்றது என்பதுடன் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்..சேனநாயக்க தமிழ் மக்களின் கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கு 1949 கல்லோய குடியேற்றம் ஆரம்பித்தார்.
மாறி இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் பல இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களை கொலை செய்தது மாத்திரம் அல்லாது அவர்களின் சொத்துக்கள்ளை சூறையாடினர் 1983 ம் ஆண்டு நடைபெற்ற பெரிய இனக்கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறுகொண்டு எழவைத்தது 83 ம் ஆண்டில் இருந்து சுயாட்சிக்காக உரிமைக்காக தனிநாடுகொரி போராடிக் கொண்டிருந்தனர்.
2009 18 ம் திகதி அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போரடிவருகின்றது இந்த நிலையில் எதிர்வரும் 4ம் திகதி 75 வது சுதந்திர தினத்திற்கு முன்பு இனப்பிரச்சனைக்கான தீர்வை தருவதாக ஜனாதிபதி ரணில் கூறிக் கொண்டு சர்வகட்சி மாநாடுகளை நடாத்திக் கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேசி வருகின்றார்.
1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் கூட கிழக்கில் 5 வருடமாகவும் வடக்கில் 4 வருடமாகவும் நடைபெறவில்லை. தற்போதைய அரசியல் பொருளாதார சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியா 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் பகிரப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தவேண்டும அழுத்தம் கொடுத்துவருகின்றது
கடந்த கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் நேரடியாக இலங்கைக்குவிஜயம் செய்த போது தெரிவித்துள்ளார். அதேவேளை சிங்கள பேரினவாத சகத்திகளான விமல்வீரவன்ச, சரத்வீரசேகர போன்றவர்கள் 13 வதை அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் என கருத்து தெரிவித்துவருகின்றனா.;
94 ம் ஆண்டில் இருந்து 10 வருடம் நாட்டை ஆட்சி செய்த சந்திரிக்கா ஆட்சி காலத்திலே பிராந்தியங்களின் ஒன்றியம் என்று நீலன் திருச்செல்வம் ,ஜீ.எல். பீரிஸ் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தை எதிர்காதவர்கள் இன்று 13 திருத்தசட்டத்தை எதிர்க்கின்றனர்
ஆக மொத்தத்தில் இந்த நாடு பொருனாதார ரீதியாக பாதிக்ப்பட்டிருக்கும் போது இலங்கையில் புரையோடிப் போயுள்ள இந்த இனைப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை தராவிட்டால் இந்த நாடு உருப்படுவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பமும் கிடையாது
சுதந்திர தினம் கொண்டாப்பட்டிருக்கும் போது சுதந்திரம் கிடைக்காத தமிழர்கள் ஆகிய நாங்கள் இந்த சுதந்திரததினத்தை கொண்டாட வேண்டிய தேவை இல்லை என்பதுடன் எதிர்வரும் 4ம் பல்கலைக்கழக மாணவர்கள் வடகிழக்கு இணைந்து யாழில் இருந்து மட்டக்களப்பு வரை கண்டனப் பேரணி நடாத்தவுள்ளது அதற்கு இன்று 5 கட்சிகள் இணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் தமிழ் பேசும் மக்கள் முழுஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளர்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours