மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம்(12.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணித்தியாலம் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரண்டு மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours