அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இளம் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (9) கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.


கிழக்கு மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை,) களுவாஞ்சிகுடி மாணவர்களான ம.தசாப்தன், தி.ஷேம், த.வேதுஜா, சு.சுமித்ரா, கோ.சஸ்மியா, ர.கேனுசாந், அ.சஜீத், ச.திருத்திகா, வ.பத்மலோஜனி, சி.தரண்யா ஆகிய மாணவர்களும் 
இம்மாணவர்களும் இவர்களை  சிறப்புற பயிற்றுவித்து வழிகாட்டி தொடர்ச்சியாக விஞ்ஞான ஆராய்ச்சிகளில் முதல் நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற பாடசாலையின் இரசாயனவியல் பாட ஆசிரியர்  திரு. செ.தேவகுமாரும் இப்பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

  அத்துடன், குறித்த மாணவர்களின் ஆராய்ச்சியானது பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் அவர்களின் வழிகாட்டலில் அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தலைசிறந்த 27 பாடசாலைகளின் ஆராய்ச்சிகளில் ஒரே ஒரு தனித் தமிழ்ப் பாடசாலையாக பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடி  தடம் பதிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours