கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித் தமிழ் கட்சியாக படகு சின்னத்தில் போட்டி போடுகின்றோம். மொட்டுக்கே யாணைக்கோ அடைவுவைக்கப்பட்ட கட்சியல்ல எனவே கிழக்கு மாகாணத்தை நேசிக்கின்ற எல்லா தமிழ் கட்சிகளும் எங்களுடன் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிடம் வேட்பாளர்களை அறிமுகம் செய்யம் நிகழ்வு கல்லடி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எப்போதும் இனக்கப்பாட்டு அரசியலை செய்து மக்களை கட்டியொழுப்ப என்னுகின்றது அதற்கு காரணம் பல கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது நாங்கள் நீண்டகால வரலாற்றில் போரடியதன் காரணமாகவும் அந்த போராட்டத்தின் வலிமையும் அந்த போராட்டத்தை நம்பியதால் அரசியல் பக்கம் பார்க்காமல் விட்டோம் எங்களுடைய இடங்கள் கறுப்பாகவும் சில இடங்கள் வெளுப்பாகவும் ஆகியது
அதனால் எங்கள் கல்வி பின்னோக்கி தள்ளப்பட்டதுடன் பொருளாதாரம் அமுழ்ந்து போனது இதை உணர்ந்த நாங்கள் அரசியலையும் அரச நிருவாகத்தையும் அரச பலத்தையும் சமமாக கையாண்டு கொண்டுதான் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூரநோக்கில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்
இந்த நோக்கத்தை அடைவதற்கு இனக்கப்பாட்டு அரசியல் என்பது முக்கியமாக பார்க்கின்றோம் அதனால் தான் முரண்பாடுகளோடு மாநகரசபையையே உள்ளூராட்சி சபையையே கட்டியொழுப்ப முடியாது இனக்கப்பாட்டுன் தான் கட்டியொழுப்ப முடியும்.
72 வரும் கடந்தும் இந்த மக்களுக்கு ஒன்றும் பெற்றுக் கொடுக்க முடியாத கட்சியால் இனியும் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது இங்கு எம்.சுமந்திரன் ஒற்றுமை பற்றி அறைகூவல் விடுகின்றார். அவருடைய வீட்டுக்குள்ளேயே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத ஒருவர் அவர்களே கட்சியின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு இரா.சாணக்கியன் கூட்டமைப்பின் பேச்சாளர் என வேடம் தரித்து இந்த அணி மற்றவர்களுக்கு அழைப்பு விடுகின்றது.
கிழக்கு மாகாணத்தை நேசிக்கின்ற பற்றுள்ளவர்கள் கிழக்கு மாகாணம் பலவீனப்பட்டுள்ளது கிழக்கு கிழக்காக இருக்கவேண்டும் என ஏற்றுக்கொள்ளும் எல்லா தமிழ் கட்சிகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் அணிதிரளுங்கள் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
நாங்கள் கிழக்கை கட்டியொழுப்புவோம் எங்கள் மக்களை மீட்டொடுப்போம் கல்வி கலாச்சார பொருளாதாரத்தை எங்களால் கட்டியொழுப்புவோம் என்று தன்னம்பிக்கையுடன் எழுந்துவாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் மாறாக கொழும்பில் இருந்து யாழ் சென்று படம் எடுக்க வேண்டாம் வேசத்தை கலைக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்றால் போல் தொப்பிகளை மாற்றிக் கொண்டால் நீங்கள் பெரிய ஜனநாயக வாதிகளாக அல்லது காந்திவாதிகளாக முடியாது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இருப்பு என்பது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் இருப்பு இந்த கிழக்கு மாகாணசபை 20 வருடம் இயங்காதிருந்த போது அதனை தூசிதட்டி எழுப்பி எடுத்தோம் 2008 ம் ஆண்டு நான் போட்டியிடும் போது என்னை தோற்கடிக்க வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரசுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்த மிகப் பெரிய துரோகி மாவை சேனாதிராஜா
இந்த துரோக கூட்டம் 2012ம் ஆண்டு என்னை தோற்கடிப்பதற்காக கொள்கைகளை விட்டுவிட்டோம் மாகாணத்தில் போட்டியிடுவோம் என வந்து கிழக்கில் என்ன செய்தது என்று மக்களுக்கு தெரியும்
கிழக்கு மாகாண மக்களை அழிப்பதும் கிழக்கில் உருவாகும் தலைவர்களை இல்லாம் செய்வதும் அவர்களின் மண்டைகளை கழுவி இல்லாமல் செய்வதும் கடந்த வரலாற்றில் இராஜதுரை போன்றவர்களுக்கு செய்ததை கற்றிருக்கின்றோம்
நாங்கள் இறக்கும் வரைக்கும் செய்யும் பணி இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை கைவிட முடியாது போலி தேசியம் பேசி கிழக்கை அழிக்கும் போலி தேசியவாதிகளை அடித்து நிறுத்தி ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத்தையும் தமிழர்களுடைய ஆட்சியை மீண்டும் நிறுவி கிழக்கு மாகாண தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க கூடிய ஒரு ஆட்சி அதிகாரத்தையும் நிர்வாக கட்டமைப்பையும் கட்டிவளர்;க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்துக்கு வாக்களியுங்கள்
Post A Comment:
0 comments so far,add yours